<$BlogRSDUrl$>

Thursday, April 22, 2004

மண்டை காயுது சாமியோவ் 

தமிழ் வட்டத்தில் Pari என்று ஒருவர் இருக்கிறார். Paari என்று ஒருவர் இருக்கிறார். (ரெண்டு பேரும் ஒருத்தர் தானா தெரியல). Balaji Pari என்று ஒருவர் இருக்கிறார் அவர் Pariஅல்லது Paari-ல் ஒருவராகத்தான் இருப்பார். Boston Balaji என்று ஒருவர் இருக்கிறார். வேறு ஒரு Balaji இருக்கிறார். Bala Subra (பாலாஜி சுப்பிரமணியன்) என்று ஒருவர் இருக்கிறார், இவர் மேற்சொன்ன பாலாஜிகளில் ஒருவர். Hari என்று ஒருவர் இருக்கிறார். Hari Krishnan என்று ஒருவர் இருக்கிறார். கார்த்திகேயன் என்று இரண்டு பேர் இருக்கிறார்கள். கார்த்திக்ராமாஸ் இவர்களில் ஒருவர். Muthu இருக்கிறார், Muthuraman-ம் இருக்கிறார்.

நல்ல வேளை பத்ரி, பாரா, அருண், காசி, செல்வராஜ், மதி,சந்திரவதனா - இந்த பெயரிலெல்லாம் ஒருவர் தான் இருக்கிறார்கள்.

டுபுக்கு, தமிழ் டுபுக்கு - ரெண்டும் நாந்தேன்.

பேசாமல் எல்லாரும் டுபுக்கு டமுக்கு, இட்லி வடை, போண்டா, பஜ்ஜி என்று பெயர் வைத்துக்கொண்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும்.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?