Friday, May 21, 2004
வா !
ஆச்சு...டிக்கெட் புக் பண்ணியாச்சு, லீவுக்குச் சொல்லியாச்சு, ஊர்ல அப்பா அம்மாக்குச் சொல்லி ஏற்பாடெல்லாம் பண்ணியாச்சு. சனிக்கிழமை பொட்டியத் தூக்கவேண்டிதான். டிக்கெட்டை ஏர்போட்டில் வாங்கிக்கச் சொன்னார் ஏஜன்ட். ஏர்போட்டில் "டுபுக்குகா தோஸ்து" என்று சொன்னால் டிக்கெட்டைத் தருவான் என்றார் ஏஜன்ட். எனக்கு முன்னாலேயே இது மாதிரி ஒரு தரம் சுகானுபவம் இருந்த்தால் நானே உன் வீட்டுக்கு வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இந்தியாவில் இருக்கும் போது. போர்பந்தரில் இருந்து மும்பாய் வழியாக டிக்கெட் தருவதற்குப் பதிலாக மும்பை வழியாக டெல்லிக்குத் தந்துவிட்டான். ப்ளைட் ஏறும் போது தான் பார்த்தேன். அப்புறம் மும்பையில் ஐய்யோப் பாவம் முழியெல்லாம் முழித்துக் கொண்டு டிக்கெட்டை மாத்திக் கேட்டேன். மாத்திக் குடுத்து..கையில் 500 ரூபாய் செலவுக்கும் குடுத்தார்கள்.
இன்னும் வெள்ளிக்கிழமை ராத்திரி இருக்கே என்று துணிமணியெல்லாம் எடுத்து வைக்கவில்லை. சிங்காரச் சென்னை வழிதான். நான் மலையாளத்தில் சம்சாரிப்பதைப் பார்க்க கேரளத்து ஏர்ஹோஸ்டஸ்கள் குடுத்து வைக்கலை. சீய்ச் சீ... திருவனந்தபுரம் புளிக்குமாமே? அங்கு ஒரே வெய்யிலாம்...கச கசவென்று இருக்குமாம் தண்ணிக் கஷ்டம் வேறாம். மனுஷன் போவானா இப்போ அங்க. சென்னைதான் குளு குளுவென்று இருக்காம் பாலும் தேனும் ஓடுகிறதாம். டிக்கெட் கிடைக்கலையேன்னு இதெல்லாம் சொல்லலை சார்...
ஒருவாரம் சூறாவளிப் பயணம். அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வந்திருவேன். ஊர்லேர்ந்து வலைப் பதிவு போடமுடியுமா தெரியவில்லை. எல்லாம் வல்ல வி.எஸ்.என்.எல் கருணை கிட்டவேண்டும்.(கிழிச்சேன்னு யாருய்யா சவுண்டு விடறது?)
உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். நல்லா வேளாவேளைக்குச் சாப்பிடுங்கள். எண்ணை தேய்ச்சுக் குளியுங்கள். தோ..ஓடி வந்துறுவேன்.....கண்ணைத் தொடைச்சிக்கோங்கோ அழலாம் பிடாது....அதுவரைக்கும்....வா
அன்புடன்
டுபுக்கு
பி.கு - அதென்ன வா??..."வா என்றால் வணக்கம்"..நியூ.பாட்டுகேட்டதில்லையா? கேட்டு அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் :P
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.