<$BlogRSDUrl$>

Tuesday, September 07, 2004

சௌபாக்கியவதி 

போன முறை பெற்றோரை அழைத்து வர இந்தியா சென்ற போது, ரெண்டு மூனு டி.வி.டி வாங்கி வந்தேன். தில்லானா மோகனாம்பாள் வாங்கிவிட்டு வேறென்ன வாங்கலாமென்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அது கண்ணில் பட்டது. எல்லாமே பழைய படங்கள் தான் என்று முடிவு செய்திருந்தேனாகையால் பழைய படங்கள் வரிசையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.(நான் கூட இல்லாட்ட இந்த மாதிரி தான் கூத்தடிப்பீங்க - மனைவி). திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு பஸ்ஸில் கிளம்பும் முன் இவ்வளவு கூத்தும். நல்ல கடை. அரதப் பழசு படங்கள் கூட இருந்தது. சௌபாக்கியவதி - ஜெமினி கணேசன், சாவித்திரி, தங்கவேலு இவர்களுடன் மந்திரவாதி மாமா வேஷத்தில் ரங்கராவ் வேறு நின்று கொண்டிருந்ததால் டபக்கென்று வாங்கிவிட்டேன். இருந்தாலும் நல்ல படமா என்று சந்தேகமாக இருந்த்து. பஸ்ஸில் வந்து அம்மா,அப்பாவிடம் காட்டினேன். "ஏன்டா கில்லி நன்னாருக்காமே அதெல்லாம் வாங்காம இதப் போய் வாங்கிருக்கியே? " - அவர்கள் கேட்டவுடனேயே புரிஞ்சு போச்சு வீட்டுல ரியாக்சஷன் எப்பிடி இருக்கும் என்று. அதே மாதிரி ஒரு வாரம் கழித்து தான் படத்தைப் போட முடிந்தது.
நல்ல படம். எழுத்து போடும் போதே லலிதா சகஸ்ரநாமம் மாதிரி ஏதோ ஒரு ஸ்லோகம் சொல்ல ஆரம்பிக்கிறார்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். "இந்த ஸ்லோகம் நம்மாத்துல இல்லையே...ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்..ஸ்லோக கேஸட்டுமாவும் ஆச்சு, படமாவும் ஆச்சு" என்று சப்பைக் கட்டு கட்டிப் பார்த்தேன். எடுபடவில்லை.
ரங்கராவ் மந்திரவாதி என்று படம் முழுக்க செல்ஃப் டிசைன் போட்ட கருப்பு உள்பாவாடையைக் கட்டிக் கொண்டு வருகிறார். ஆள் நல்ல ஆஜானுபாகுவாக இருக்கிறார். ஜெமினி கணேசன் ஜரி வேலைப்பாடு கொண்ட பேண்ட்டுடன் மிடி போட்டுக் கொண்டு வருகிறார். கதை - ஜெமினி கணேசன் சாவித்திரி தம்பதியை தன்னுடைய சுயநலத்துக்காக பிரிக்கப் பார்க்கிறான் மந்திரவாதி ரங்கராவ். சாவித்திரி உம்மாச்சியைக்கு துணைக்கழைக்கிறார். ஜெமினி - ரங்கராவ் டிஷ்ஷூம் டிஷ்ஷும் ஜெயம் சுபம். தங்கவேலு முத்துலெட்சுமி காமெடி. "திலலையம்பல நடராஜா..." சூப்பர் ஹிட் பாடல்.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?