Nedstat Basic - Free web site statistics
Personal homepage website counter
Free counter

Monday, October 31, 2005

தீபாவளி வாழ்த்துக்கள்! 

சொன்ன மாதிரி வெள்ளிக்கிழமை பதியமுடியவில்லை. மன்னிக்கவும். வேலைப் பழு மிக அதிகமாகிவிட்டது. அதோடு தீபாவளி பார்டி வேறு. தீபாவளி பார்ட்டி மிக ஜாலியாக இனிதே நடந்தது. எல்லோருக்கும் காலேஜ் நாட்களுக்குச் சென்று வந்த நிறைவு. வலைப்பதியும் கும்பலிலிருந்து நான், சக்ரா, சுரேஷ், ப்ரேமலதா ஆகியோர் கல்ந்த்டுகொண்டோம். மொத்தம் ஐம்பது பேர் என்று நினைக்கிறேன். பெரும்பாலோனோர் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். மிக அழகான மேடை, பல மைக்குகளுடன் கூடிய அற்புதமான ஸ்பீக்கர் ஸிஸ்டம் வேறு. தனிப் பாட்டு, கிடார், கீபோர்ட், ஜோடிப் பாட்டு என்று பாட்டுக்களில் பலவகை. தனிக் குத்து, கும்மிக் குத்து, பாம்பு டான்ஸ், ஜோடி நடனம் என்று எல்லோரும் குத்து குத்துவென செம குத்து குத்தினார்கள். நிறையபேர்களை சந்தித்தேன். நிறைய எழுத வேண்டும்....பிறகு முயற்சிக்கிறேன். என்னமோ இப்போது ப்ளாகரிலிருந்து படங்கள் அப்லோட் செய்ய முடியவில்லை. சாயங்காலம் மீண்டும் முயற்சிக்கிறேன்.

மற்றபடி தீபாவளி வாழ்த்துக்கள்!!


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?