Monday, October 10, 2005
தீபாவளி பார்ட்டி / Diwali Party London
நேற்றைய பதிவில் ஒரு பிழைத் திருத்தமும், பெண்களின் ஏகோபித்த வேண்டுதலுக்காக உள்ளம் கவர் கள்வன் வில்லன் பொன்னம்பலத்தையும் விழாவிற்கு அழைத்துள்ளோம்.
**********************************************
தீபாவளிக்கு இங்கு லண்டனில் ஒரு சந்திப்பு நடத்தலாம் என்று நண்பர்கள் சேர்ந்து முடிவெடுத்துள்ளோம். இப்போதைக்கு நடத்தும் பொறுப்பை நான், சக்ரா, பாலன் மூவரும் பகிர்ந்துகொண்டுள்ளோம். ஏற்பாடுகள் துரிதமாக(?!) நடந்து வருகின்றது.
நாள் - 29 அக்டோபர் சனிக்கிழமை மாலை
கட்டணம் - தலைக்கு பத்து பவுண்டு (10 வயதுக்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது)
ஸ்வீட்லிருந்து ஆரம்பித்து வித விதமான மெனுவோடு மிகச் சிறந்த உணவு (சென்னை தோசாவிலிருந்து). ஜோடிகளுக்கு, குடும்பத்துக்கு, குழந்தைகளுக்கு, பிரம்மச்சாரி/ரினிகளுக்கு ஜாலியான விளையாட்டுகள் என்று நான்கு மணி நேரத்தை அடுத்த தீபாவளி வரை நினைவில் வைத்துக்கொள்ளுமாறு அமைக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். யூ.கே,இங்கிலாந்து, ஐக்கிய ராச்சியம் (எல்லாம் ஒன்னு தாங்க) ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் வர ப்ரியப்பட்டால் r_ramn at yahoo dot com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும். மேலும் விபரங்களை அனுப்பி வைக்கிறேன். வெளியூரில் இருக்கும் அன்பர்கள் இந்த தேதியில் இங்கு வர சௌகரியப்படால் அவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
விழாவிற்கு அஸின் மட்டும் போதுமா இல்லை த்ரிஷாவையும் கூட்டிக்கொண்டு வருவதா என்று பொதுக்குழு சண்டை நடந்து வருகிறது. பாலனுக்கு நயன் தாராவும் வர வேண்டுமாம். எனக்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்லிவிட்டேன்.(ஆட்சேபனை எல்லாம் வூட்டுல தான் இருக்கும்). பெண்கள் ஏமாற்றமடையக் கூடாதே என்று சத்யராஜ், விஜயகாந்த்,பொன்னம்பலம் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோரைக் கூட்டிக் கொண்டு வரலாமென்றிருக்கிறோம்.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.